க.பொ.த சாதாரண தரம் செயன்முறை பரீட்சை திகதியில் மாற்றம்
கடந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ( 05 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் , செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும் பல காரணங்களால் அது இம்மாதம் 20 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டதாகத் தெரிவித்தார் .
மேலும் , சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.