School First Term Complete

School First Term Complete  

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை இன்றுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அன்று முதல் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமை மற்றும் எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் அவ்வப்போது இடைநிறுத்தப்பட்டன.

அதன்படி, இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post