A separate center for educational reform

 

A separate center for educational reform
கல்வி சீர்திருத்தத்திற்கான தனி மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் கீழ் தனி மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது . 

இந்த மத்திய நிலையம் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் கீழ் செயல்படும் அதேவேளை நிர்வாக மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது . 

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன . இதன் கீழ் தற்போது உள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் 96 , நூற்றி இருபது ஆக அதிகரிக்கப்படவுள்ளது . 

அடுத்த ஆண்டுக்குள் பாடத்திட்ட சீர்திருத்தங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும் மத்திய நிலையம் திட்டமிட்டுள்ளது . 

இந்த சீர்திருத்தங்களின் கீழ் , Module முறை அறிமுகப்படுத்தப்பட்டு , பாடப்புத்தகங்களுக்கு பதிலாக , மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ற Module வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதுவரை இந்த சீர்திருத்த செயல்முறை கல்வி ராஜாங்க அமைச்சினால் செயல்படுத்தப்பட்டது . ராஜாங்க அமைச்சு ரத்து செய்யப்பட்டதால் , "கல்வி சீர்திருத்த மையம் " நிறுவப்பட்டுள்ளது .



Post a Comment

Previous Post Next Post