உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடும் திகதி உறுதிப்படுத்தப்பட்டது
உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடும் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 30 ஆம் திகதி வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி தர்மசேன சிலுயின பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார் .
தற்போது நடைபெறும் பிரயோகப் பரீட்சைக்குத் தோற்றும் 450 மாணவர்களின் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதும் உயர் தரப் பெறுபேறுகள் இறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
20220 பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிட 6 மாதங்கள் தேவைப்பட்ட போதிலும் 2021 பெறுபேறுகளை 5 மாதங்களில் வெளியிட முடிந்தமை வெற்றியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் .