ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் எனவே , ஆசிரியர்களுக்கு சில சலுகைத் திட்டம் தேவை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
நகர்ப்புறப் பாடசாலைகளை விட புற நகர்ப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் , ஆசிரியர்கள் வருவதில் கடும் சிரமம் ஏற்படுவதுடன் , போக்குவரத்துக்கு மட்டும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார் .
இந்நிலைமையின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்வதற்கு மாகாணங்களுக்கு வர வேண்டும் எனவும் அண்மையில் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது இந்த நிலைமையை நன்கு புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார் .
மேலும் , பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்கு வரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைகளை நடத்துவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார் .
Tags:
NEWS