பல்கலைக்கழகங்கள் விரைவில் ஆரம்பமாகும்.
பல்கலைக்கழகங்கள் விரைவில் ஆரம்பமாகும் . கற்றல் நடவடிக்கைககளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரசிங்க தெரிவித்துள்ளார் .
இது தொடர்பான தீர்மானம் எடுப்பதற்கு பல்கலைக்கழகங்களுடன் தொடர்புடையவர்களுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட் கிழமை கலந்துரையாடல் ஒன்று நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
தற்போது மருத்துவ பீடத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.