பொதுவாக ஆசிரியர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை மூலமாக அதிகூடிய புள்ளியை பெறும் பரீட்சார்த்திகள் நியமனங்களை பெற்றுக் கொள்வார்கள்..
ஆனால் கல்வியியல் துறையில் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் எந்தவிதமான போட்டிப் பரீட்சையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது..
அதேபோல வேறு துறைகளில் பட்டம் பெற்று ஆசிரியர் சேவைக்கு ஒருவர் உள்வாங்கப்பட்டால் ஆசிரியர் சேவையின் தரம் 3 நிலைக்கு உள்வாங்கப் படுகின்றனர்.. ஆனால் நீங்கள் கல்வியியல் துறையில் ஒரு பட்டத்தை பெற்றிருக்கும் பட்சத்தில் நேரடியாகவே தரம் 2 நிலைக்கு உள்வாங்க படுவீர்கள்..
நீங்கள் உயர் தரத்தை பூர்த்தி செய்துவிட்டு ஆசிரியர் தொழிலுக்குள் நுழைய ஆர்வம் உள்ளவராக இருந்தால் குறித்த கல்வியியல் பட்டத்தை பயில்வதன் மூலம் மிக வேகமாக நியமனத்தை பெற்றுக் கொள்வதுடன் சாதாரண பட்டத்தை பெற்றுக் கொண்ட வரையிலும் பார்க்க மூன்று வருடங்கள் முன்னதாகவே அடுத்த நிலை பதவிகளுக்கு முன்னேற முடியும்..
Bachelor of education Honours in primary education
திறந்த பல்கலைக் கழகத்தினால் நடத்தப்படுகின்ற கல்வியியல் சம்பந்தமான கற்கைநெறி இதுவாகும்..
இதற்கான கல்வித் தகைமைகள் பின்வருமாறு
1.உயர்தர பரீட்சையில் மூன்று சித்திகள் இருப்பது போதுமானது.. கற்கைநெறி க்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரிகள் ஒரு நுழைவு பரீட்சைக்கு உட்படுத்தப் பட்டு அந்த பரீட்சையில் சித்தி அடைபவர்கள் பாடநெறிகள் உள்வாங்கப்படுவர்..
2.ஒருவேளை உங்களுக்கு உயர்தரத்தில் 3 சித்திகள்
இல்லாவிட்டால் உங்களுக்கான
மேலதிக வாய்ப்பு ஒன்று வழங்கப்படும்..
இதற்கு சமமான அடிப்படை பாடநெறியை
பூர்த்தி செய்துவிட்டு இந்தப் பாடநெறியை
தொடரும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்..
அல்லது
இத் திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற முன்பள்ளி உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி பூர்த்தி செய்தவர்களுக்கு உள் வாங்குவதற்கான பரிட்சையில் தொடாமலே இந்த பட்டப்படிப்பு பாடநெறிக்கு தங்களை பதிவு செய்து கொண்டு பாடநெறியை தொடர முடியும்..
தற்பொழுது இந்த கற்கைநெறி நான்கு வருட பட்டப்படிப்பு கற்கை நெறியாக வடிவமைக்கப்பட்டுள்ளது..
தமிழ் அல்லது சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த கற்கை நெறியை பயில முடியும்..
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழக மையங்களில் உங்களால் இந்தப் பட்டப் படிப்பைத் தொடர முடியும்.. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் சேர்க்கப்படும் மாணவர் எண்ணிக்கை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது..
குறித்த கற்கை நெறிக்கான விண்ணப்பம் இன்னும் சில நாட்களில் அதாவது 27 ஆம் திகதி மார்ச் 2022 முதல் 17ம் திகதி மே மாதம் 2022 வரை கோரப்படும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள திகதி முதல் உங்களால் விண்ணப்பிக்க முடியும்..
https://reginfo.ou.ac.lk/applyonline/
கற்கைநெறி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள
விபரங்கள் அடங்கிய PDF
தொகுதி இணைக்கப்பட்டுள்ளது.. கீழே உள்ள
லிங்கை கிளிக் செய்து அதனை டவுன்லோட்
செய்வதன் மூலம் முழு விபரங்களையும் வாசித்து
அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்..
https://drive.google.com/file/d/1cqZB704weUXn3of2aiIgfhrTV1vyqe78/view