அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 16/2022 இன் ஏற்பாடுகள் இரண்டு வாரங்களுக்குப் பொருந்தும் வகையில் வெளியிடப்பட்டிருந்தாலும் , அந்த இரண்டு வாரங்கள் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதி மற்றும் தற்போதைய நிலைமை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு , அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் மற்றும் 16/2022 ( 1 ) சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் 2022.07.24 ஆந் திகதி வரையிலும் அன்றிலிருந்து அடுத்த ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனக்கருதி செயற்பட வேண்டும் .
அரசாங்க உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிப்பதில் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு , அதற்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை தவறாகப் பயன்படுத்தி பணிக்கு சமூகமளிக்க முடியுமான உத்தியோகத்தர்களும் பணிக்கு சமூகமளிக்காத நிலை ஏற்பட இடமளிக்கலாகாது .
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக எரிபொருள் விநியோகம் மீளமைக்கப்பட்டு வருவதுடன் , அதன்படி எதிர்வரும் நாட்களில் பொதுப் மீளமைக்கப்படும் . இந்த விடயங்களை சேவைகளும் படிப்படியாக போக்குவரத்து கருத்திற்கொண்டு , இணையவழி ஊடாக மேற்கொள்ள முடியாத பணிகளுக்கும் அத்தியாவசிய பொதுச் சேவைகளை பேணுவதற்கும் தேவையான உத்தியோகத்தர்களை வரவழைப்பதற்கு இந்த சுற்றறிக்கை ஏற்பாடுகள் தடையாக அமையாது என்பதையும் மேலும் அறியத்தருகிறேன் .
2022.07.22 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது .