Special notification issued by Ministry of Education.

 

Special notification issued by Ministry of Education.

Special notification issued by Ministry of Education.

Sinhala - Click Here...

கல்வி அமைச்சின் வளாகத்தில் இன்று (23) இடம்பெற்ற போராட்டம்  தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பிரச்சினை தொடர்பில் கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சில் பிக்ஷு பல்கலைக்கழக நிர்வாக  சபை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரால் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.  அங்கு, நிர்வாக  சபை எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தது.  பல்கலைக்கழக விவகாரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்வாக  சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக இடம்பெற்ற கலந்துரையாடலில் உயர்கல்வி அமைச்சுக்கு பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன்படி, வார இறுதிப் பிரித் பாராயணம் செய்த பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழகத்தை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக  சபை தெரிவித்துள்ளது.


மேலும், சில மாணவர்களுக்கான தடை விதிப்பு நிர்வாக  சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது, அதன்படி நிர்வாக  சபை எடுக்கும் முடிவுகளை மாற்றுவதற்கு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை எனவும், அந்தத் தீர்மானத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனை நிர்வாக சபை செய்ய வேண்டும். இதில் அமைச்சு தலையிட முடியாது.அதைச் செய்ய முடியாது என உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விடயங்கள் இவ்வாறு  இருந்தும் இலங்கையில் உள்ள 42 இலட்சம் சிறுவர்களின்  கல்வியை கையாளும் கல்வி அமைச்சுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பலவந்தமாக  நுழைந்தது மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் பொலிஸார் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தாக  சுட்டிக்காட்டியுள்ளது



Post a Comment

Previous Post Next Post