Lack of teachers for high quality answer sheet evaluation
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த அமைச்சுப் பத்திரம் ஒரு மாதத்திற்கு முன்னரே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சிரமங்கள் இருந்த போதிலும், அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பெறுபேறுகளை பூர்த்தி செய்வதற்கு 1,300 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
அவர்களுக்கும் தொழில் ரீதியாக பிரச்சினை இருப்பதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත පවසා තිබුණේ උසස් තත්ත්වයේ පිළිතුරු පත්ර ඇගයීම සඳහා අයදුම් කළ ගුරුවරුන්ගේ හිඟයක් පවතින බවයි.
අද (23) පාර්ලිමේන්තුවේදී අදහස් දක්වමින් අමාත්යවරයා සඳහන් කළේ ගුරුවරුන් 19,000ක් අවශ්ය වුවද මේ වන විට අයදුම් කර ඇත්තේ ගුරුවරුන් 15,000ක් පමණක් බවයි.
මීට මාසයකට පෙර අමාත්ය මණ්ඩල පත්රිකාව ඉදිරිපත් කළ බවත් දුෂ්කරතා මධ්යයේ වුවද කැබිනට් මණ්ඩලය එය අනුමත කළ බවත් අමාත්යවරයා වැඩිදුරටත් පැවසීය.
මේ අනුව ගුරු දීමනාව යම් ප්රමාණයකට ඉහළ දමා ඇති බව දන්වා සිටි අමාත්යවරයා ප්රතිඵලය සපුරාලීමට විශ්වවිද්යාල ආචාර්යවරුන් 1300ක් අවශ්ය බව පැවසීය.
ඔවුන්ට ද වෘත්තීය ගැටලුවක් පවතින බව සඳහන් කළ අමාත්යවරයා සිකුරාදා මුදල් අමාත්යාංශය සමඟ විශේෂ සාකච්ඡාවක් පවත්වන බව ද සඳහන් කළා.