Special Announcement for School Students
இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவதைத் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிந்து செல்வது ஆரோக்கியமானது என சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
“இன்றைய குளிர் மற்றும் தூசி நிறைந்த சூழல் காரணமாக, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்தக் குளிர் காலநிலையில் இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றால் நல்லது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் இந்த நாட்களில் பொதுவாக பரவி வருகிறது.
எனவே இது பாடசாலைகளிலும், தினப்பராமரிப்பு நிலையங்களிலும் எளிதில் பரவும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
குழந்தைகளுக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அவர்களை வீட்டில் வைத்திருங்கள்.
பாடசாலை செல்லும் குழந்தைகள் முடிந்த வரை முகக்கவசம் அணிந்து செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.