Many schools are closed due to the weather
வானிலை பிரச்சினை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இன்று (8) விடுமுறை வழங்க ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம்.ரத்நாயக்க தீர்மானித்துள்ளார். இன்று சுமார் 26 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இதன்படி, பசறை கல்வி பிராந்தியத்தில் 20 சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளும், பிபில பிரதேசத்தில் 3 பாடசாலைகளும் மொனராகலை பிரதேசத்தில் 3 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, பசறை-கனவரெல்ல வீதியில் இருந்து நமுனுகுல கிளப் சந்தி வரையான பகுதி, வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக முற்றாக மூடப்பட்டது.
Tags:
EDUCATION