Request to allow teachers to go to school in appropriate dress
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட அரச சேவையின் கெளரவத்தைக் காக்கும் வகையில் பொருத்தமான ஆடையுடன் வருகை தருவது தொடர்பான சுற்றறிக்கை ஆசிரியர்களும் அமுல்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து சிரமம் காரணமாக பல பெண் ஆசிரியைகள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வந்து செல்வதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புடவை, ஒசரியா போன்றவற்றால் இடையூறாக உள்ளதால், அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட அரச சேவையின் கௌரவத்தைக் காக்கும் வகையில் பொருத்தமான ஆடையுடன் வருகை தருவது தொடர்பான சுற்றறிக்கை ஆசிரியர்களும் அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர்கள் குழந்தைகளுடன் பழகும்போது சேலை அல்லது ஒசரி அணிவதை விட எளிய ஆடைகளை அணிவதன் மூலம் மிகவும் திறம்பட பணியாற்ற முடியும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.