தேசிய கல்வியல் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுநர்களுக்கு சலுகை வட்டியில் மாணவர் கடன் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு 02 வருடங்கள் கற்பித்தல் தொடர்பா கோட்பாடுகளைக் கற்றுவிட்டு ஒரு வருடம் உள்ளகப் பயிற்சியை மாணவர்கள் பாடசாலைகளில் தொடர்கின்றனர் . இக்காலப் பகுதியில் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் பயணம் செய்தல் ஆகியவற்றுக்கு அரசாங்கம் தற்போது 5000 ரூபாவையே வழங்குகின்றது .
எனினும் இது மாணவர்களின் செலவுக்கு போதுமானதாக இல்லை . இதன் காரணமாக ஆசிரிய பயிலுநர்களுக்கு தற்போது கிடைக்கின்ற கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் மேலும் 10,000/- நிதி வசதியை சலுகை வட்டி அடிப்படையில் அரச வங்கியொன்றினூடாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது