தரம் 1 மாணவர்கள் பாடசாலை அனுமதி திகதிகளில் மாற்றம்
2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களைச் சேர்த்தல். 2023 ஆம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 15.06.2022 ஆம் திகதி சுற்றறிக்கை இலக்கம் 28/2022 இன் 17.0 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளது .
1. தகைமை பரிசீலனைக்கான கடைசி திகதி – ஜூன் 30
2. விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி திகதி - ஆகஸ்ட் 15
3. நேர்காணல் நடத்துதல் - நவம்பர் 11 ஆம் திகதி
4. அறிவிப்பு பலகையில் தற்காலிக பட்டியல் காட்சி - 08 டிசம்பர்
5. மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெறுவதற்கான கடைசி திகதி டிசம்பர் 21
6. மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் விசாரணை- ஜனவரி 02
7. இறுதி ஆவணத்தின் வெளியீடு - ஜனவரி 16