லொறியின் தட்டு உடைந்து 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலென்பிந்துனுவெவ , தக்ஷிலா மகா வித்தியாலய மாணவர்கள் 13 பேர் லொறியில் இருந்த தட்டு உடைந்து விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மாணவர்கள் பாடசாலை செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போதிலும் பஸ் வராததால் பாடசாலைக்குச் செல்ல சிறிய ரக லொரியில் ஏறி சென்றுள்ளனர் .
பாடசாலைக்குச் செல்லும் வழியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற லொரியின் மேற் தட்டு உடைந்ததில் லொரியில் இருந்த 37 குழந்தைகளில் 13 பேர் காயமடைந்துள்ளனர் . காயமடைந்த மாணவர்கள் கலென்பிந்துனுவெவ கிராமிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .காரணம் பஸ் இல்லாதமையாகும் என குறிபிடுகின்றனர்.
