இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்ச்சேவைக்கு சுயாதீன அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.



இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்ச்சேவைக்கு சுயாதீன அறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

க.பொ.த (உயர்தர) பரீட்சையில் குறைந்தபட்சம் 3பாடங்களில் சித்திபெற்றுள்ள மற்றும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் தமிழ் மொழியில் திறமைச் சித்திபெற்றுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அத்தோடு ஒலிவாங்கிக்கு ஏற்ற குரல்வளமும், சிறப்பான மொழியாற்றலும், உச்சரிப்பு தெளிவும், சிறந்த ஆளுமையும் உடையவராக இருத்தல், கணினியில் வேலைசெய்யும் ஆற்றல் ஆகிய தொழில்முறைத் தகைமைகள் இருக்க வேண்டும்.

18 முதல் 25 வரை வயதுடையவர்கள் முழு விபரங்களுடன் கூடிய சுய விபரக்கோவையை ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பணிப்பாளர், தமிழ்ச்சேவை,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், த.பெ.இல -574 கொழும்பு என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்குமாறும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் சுயாதீன அறிவிப்பாளர்- தமிழ் என்று குறிப்பிடுமாறும் கோரப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post