இலங்கை தகவல் , தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 3 தரம் III உத்தியோகத்தர்கள் சேவை உள்வாங்கல் பயிற்சிநெறி


2014.12.26 ஆம் திகதிய இலங்கை தகவல் , தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் பிரமாணக் குறிப்பிற்கு இணங்க , அச்சேவையின் வகுப்பு 3 க்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு பிரமாணக் குறிப்பின் 12.1.1 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதுவரையில் சேவை உள்வாங்கல் பயிற்சிநெறியைப் பூர்த்திசெய்யத் தவறிய உத்தியோகத்தர்களுக்காகக அப்பயிற்சிநெறியை நடாத்துவதற்கு ஏற்கனவே இந்த அமைச்சின் மனித வள அபிவிருத்திப் பிரிவினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .

அதனால் , அச்செயற்பாடுகளுக்கு வசதிகளைச் செய்யும் வகையில் இலங்கை தகவல் , தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு இது வரையில் சேவை ஆரம்பப் பயிற்சியைப் பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்கள் https://forms.gle/iRJrPdiJyq6zqZKc6 என்ற Google Form இணப்பில் எதிர்பார்க்கப்படும் தகவல்களை 2022/06/28 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் அறியத் தருகின்றேன் . ( பின்வரும் QR குறியீட்டின் ஊடாகவும் Google Form இணைப்பிற்குச் செல்ல முடியும் ) .






Post a Comment

Previous Post Next Post