2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரதர பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
தூர பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் நாளை (20) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
9 மாகாணங்களிலுமுள்ள கஷ்டப்பிரதேசங்களிலுள்ள அதிபர்கள் உள்ளிட்ட அனைத்துஅதிகாரிகளிடமும் கலந்துரையாடியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.