சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் டொன் அரிசி கொண்ட நாற்பத்தி நான்கு கொள்கலன்கள் நேற்று ( 28 ) இலங்கையின் கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன .
இலங்கை முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளுக்கு சீனா மொத்தம் 10,000 மெட்ரிக் டொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதாகவும் , அது 6 மாதங்களுக்கு பாடசாலை உணவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் உள்ள CICT இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் சீனத் தூதுவர் Qi Zhenhong இத்தொகையை கையளித்தார் . "
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் , குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் " என தூதுவர் Qi Zhenhong தெரிவித்தார் .
அடுத்ததடுத்த வாரங்களில் மேலும் இரண்டு அரிசி நன்கொடைகள் வரும் என்று அவர் மேலும் கூறினார் .
இதற்கு மேலதிகமாக , புதிய கல்வியாண்டில் நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன தூதரகம் இலங்கையின் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார் .