கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் இன்றைய கல்விசார் கலந்துரையாடல்

 


கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடத்தினார்.

நிறுவனங்களின் சேவைப் பிரிவுகள், கிளைகள் மற்றும் அலகுகளை ஒருங்கிணைத்து சேவைகளை வினைத்திறனுடனும் பேணுவதற்கான வழிமுறைகள் குறித்து பரந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்தந்த நிறுவனங்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் கல்விச் செயலாளர் நிஹால் ரணசிங்க மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post