திங்கட்கிழமை(25) பாடசாலை நடைபெறுமா???


 இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்,எதிர்வரும் திங்கட் கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள்..!இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை   பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால் பாடசாலைகளை நடத்தும் முன்மொழிவை நிராகரித்தமைக்கு அடிப்படையாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 50 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதாக கூறிய அவர் இந்த நெருக்கடிக்கு தாங்கள் வழங்கிய யோசனையை கல்வி அமைச்சு கணக்கில் எடுக்கவில்லை என அவர் கூறினார்.



Post a Comment

Previous Post Next Post