பாடசாலைகளுக்கு 2022 ஆண்டுக்கான புத்தகங்கள் வழங்கபடுமா?????


 பாடசாலைகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.புத்தகங்களை பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மின்சார நெருக்கடியால் பாதிப்படைவார்கள் என்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினர்.இதற்குப் பதிலளித்த அமைச்சர் அடுத்த மாதத்தை அண்மிக்கும் போது நாள் ஒன்றில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின் துண்டிக்கப்படலாம் என்றார்.



Post a Comment

Previous Post Next Post