This year 12,000 teachers will retire
பெருமளவிலான ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது கல்வித்துறைக்கு சவாலாக மாறியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னைய வருடங்களில் சுமார் 4000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற போதிலும், அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசின் முடிவால் இந்த ஆண்டு 10,000 முதல் 12,000 ஆசிரியர்கள் வரை ஓய்வுபெறவுள்ளனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 03 மாதங்களில் வெற்றிடங்களை நிரப்புவது கட்டாயம் எனவும், எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.