Implementation of psychological awareness program in schools
பாடசாலை மாணவர்களின் தவறான நடத்தையைத் தடுக்க உதவும் கல்வித் திட்டமாக, ஒவ்வொரு பாடசாலையிலும் உளவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி, 2023 ஜனவரி 4 முதல் மார்ச் 24 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 முதல் 7.40 வரை 10 நிமிடங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்த தயாராக உள்ளதாக குறிப்பிடப்பட்டது.