Special Resolution of the Inspector General of Police regarding the ragging of university students.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது பகடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொள்ளும் என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெறும் அனைத்து பகடிவதை தொடர்பான முறைப்பாடுகள் எதிர்கால விசாரணைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்தார்.
Tags:
NEWS