Parents objected to a teacher wearing a different dress instead of a saree.

 

Teachers Dress Court

Parents objected to a teacher wearing a different dress instead of a saree.

கம்பாஹா, திவுலப்பிட்டிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் புடவைக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து வந்தமைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியை முதலாம் தர வகுப்புகளுக்கு கற்பித்தமைக்கு எதிராக பெற்றோர்கள் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.
அத்துடன் தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியதாக கூறி குறித்த ஆசிரியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோர்கள் குழுவொன்று இதனைச் செய்ததாக ஆசிரியரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் கடந்த 21ஆம் திகதி புடவைக்கு பதிலாக வேறு உடை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

அனைத்து ஆசிரியைகளும் பாடசாலைக்கு பணிக்கு வரும்போது புடவை அணிந்து வர வேண்டும் என கல்வியமைச்சு கட்டாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post