Request for Payment of 2021 G.C.E. A/L Answer Paper Evaluation Fee

Request for Payment of 2021 G.C.E. A/L Answer Paper Evaluation Fee

Request for Payment of 2021 G.C.E. A/L Answer Paper Evaluation Fee 

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிட்டிருந்த போதிலும் , விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு செலுத்தத் தவறியமைக்கு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுள்ளது . 

குறிப்பாக தேசிய மட்டத்தில் பரீட்சை திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இப் பரீட்சைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை , அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லாவிட்டாலும் , பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியிலும் விட்டுக்கொடுக்காமல் தமது பொறுப்புக்களை நிறைவேற்றிய ஆசிரியர்களுக்கு பரீட்சைத் திணைக்களம் போன்ற பொறுப்பான நிறுவனங்கள் பொறுப்பின்றி செயற்படுவது வருந்தத்தக்கது என சங்கம் தெரிவித்துள்ளது . 

மேலும் , தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பாக , சவாலான சூழ்நிலையை உருவாக்குவதற்கு இடமளிக்காமல் , இந்தப் கொடுப்பனவை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் வலியுறுத்துகிறது .



Post a Comment

Previous Post Next Post