பாடசாலைகளை திறக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் இலங்கை அதிபர்கள் சங்கம்

 

அரசாங்கம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கியுள்ள போதிலும் நிர்வகிக்கக் கூடிய பாடசாலைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

 முடியுமான ஆசிரியர்கள் பாடசாலை வந்து கற்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் . நேற்று ( 04 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . 

பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக புலமைப்பரிசில் பரீட்சை , கல்விப் பொதுத் தராதரப் பொதுத் தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதை அதிகாரிகள் ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாகவும் , அந்தப் பரீட்சைகளின் பெறுபேறுகளை வெளியிடுவதையும் ஒத்திவைக்க நேரிட்டதாகச் செயலாளர் குறிப்பிட்டார் . 

மேலும் , எவ்வாறேனும் பாடசாலைக்கு வருகை தர போக்குவரத்து வசதியை பெறக்கூடிய ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்து , கற்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .

அரசு பாடசாலைகளை மூட சொன்னாலும் , மாணவர்களுக்கு கல்வி கொடுக்க தயாராக இருக்கிறோம் . பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலைக்கு வந்து , பாடசாலைக்கு அருகில் ஏதேனும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி வழங்க விரும்புகிறார்கள் . 

எனவே , பராமரிக்கக்கூடிய அனைத்து பாடசாலைக்களையும் திறக்க பரிந்துரைக்கிறோம் . மேலும் , எந்தக் மாணவரும் தான் படிக்கும் பாடசாலைக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாவிட்டால் , அந்த மாணவருக்கு அருகில் உள்ள பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் . 

எப்படியிருந்தாலும் , நாங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க விரும்புகிறோம் . பல்வேறு காரணங்களால் பாடசாலைகளை மூடும் இந்த நடவடிக்கையின் பலன் இன்னும் சில ஆண்டுகளில் தெரியும் . 

எனவே , எந்தவொரு மாணவரின் கல்வியும் வீழ்ச்சியடைவதை நாங்கள் எதிர்க்கிறோம் . பராமரிக்கக்கூடிய அனைத்துப் பாடசாலைகளையும் திறக்க அதிபர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் .



Post a Comment

Previous Post Next Post