ஒரு தனிமனிதனுக்கு மாதாந்தம் ரூ 11,219 போதுமானது. அரசு அதிகார பூர்வமாக கூறுகிறது

 

இலங்கையின் மாவட்டங்களுக்கு ஏற்ப உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டை வெளியிடுவதற்கு ( Official poverty line by District ) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது . 

அதன்படி , 2022 மே மாதத்திற்கான தேசிய மதிப்பானது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ( Minimum Expenditure per person per month to fulfill the basic needs ) ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 11,219 ரூபா குறைந்தபட்ச செலவினமாக கணக்கிடப்படப்பட்டுள்ளது . 

அதன்படி , 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்சச் செலவு ரூ . 44,876 என கணக்கிடப்பட்டுள்ளது . 

இந்த எண்ணிக்கை மாவட்ட அளவில் மாறுபடுகிறது , அதன்படி ஒரு மாதத்திற்கான வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது மார்ச் 2022 ல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச செலவு ரூ . 9,284 பதிவாகியதோடு ஏப்ரலில் ரூ . 10,230 பதிவாகியுள்ளது .

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் ( NCPI ) மதிப்பே உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் அதிகரிப்புக்குக் காரணம் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது .



Post a Comment

Previous Post Next Post