2022 வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர , சாதாரண தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது .
இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை , 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது .