குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்

உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையான நிதி உதவி வழங்கப்படும் என சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post