போக்குவரத்து பிரச்சனையை தீருங்கள் இல்லாவிட்டால் பாடசாலைக்கு வரமாட்டோம் தமிழர் ஆசிரியர் சங்கம்

 


தமக்கு முறையாக பதிலளிக்கவில்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம் கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படாததால் குறித்த தீர்மானத்திற்கு வந்ததாக குறித்த சங்கத்தின் செயலாளர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் எமது போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது என்பதனை கல்வி அமைச்சிற்கும் பெற்றோருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post