அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

 

தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று (20) முதல் அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அலுவலக செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்த அளவான பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் நிறுவனப் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்றும் ,அத்தியாவசிய சேவைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post