கல்வி அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின் கருத்துக்கள் - ஆசிரியர்களுகக்கான சலுகைகள் தெரிவிக்கப்பட்டன

 

ஆரம்பிக்க முடியாத பாடசாலைகளின் ஆசிரியர்கள் கடமைக்கு சமூகளிக்கத் தேவையில்லை என்பதோடுஆரம்பிக்க முடியும் என அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகளிப்பது தன்னார்வமானது என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் . 

அவ்வாறு வர முடியாத ஆசியர்கள் அதிபர்களுடன் கலந்துரையாடி தேவையான மாற்று வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியும் என்று குறிப்பிட்டார். கவலை அடைய வேண்டாம் எனவும் குறிப்பிட்டார். அவ்வாறான நிலமையில் பாடசாலைக்கு வருவது கட்டாயப்படுத்தப்பட்டதல்ல என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார் .

இன்று அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் . 

கல்வி அமைச்சர் , அமைச்சின் செயலாளர் , பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் . 

இதன் போது பரீட்சை மதிப்பீட்டு செயற்பாடு , பாடசாலைகளை நடாத்துதல் தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இங்கு தெரிவிக்கப்பட்ட ஏனைய கருத்துக்கள் 

  •  நகர்ப்புற பாடசாலைகள் விசேட நேர அட்டவணை மூலம் நிகழ்நிலையில் கற்பிக்க நகர்ப்புற பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தயாராகவுள்ளனர் . 
  • மாணவர்களுக்காக சுயமாக மேற்படி பணியினை மேற்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை அறிவித்துள்ளார்கள் . 
  • கிராமப்புறங்களில் உள்ள போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாத பாடசாலைகள் வலயக்கல்வி அலுவலகத்துக்கு அறிவித்து நடாத்தலாம் .
  •  போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் லீவு தொடர்பில் கவலை அடையத் தேவையில்லை . மேற்படி பணியானது தன்னார்வ அடிப்படையில் ஆசிரியர்கள் சுயமாக கடமைக்கு வருவதால் லீவு பிரச்சினைகள் ஏற்படாது.
  • போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் லீவு தொடர்பில் கவலை அடையத் தேவையில்லை . 
  • மேற்படி பணியானது தன்னார்வ அடிப்படையில் ஆசிரியர்கள் சுயமாக கடமைக்கு வருவதால் லீவு பிரச்சினைகள் ஏற்படாது . 
  • எதிர்வரும் காலங்கள் அத்தியாவசிய கற்றலுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும் . 
  • நெனச கல்வி தொலைக்காட்சி மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் YouTube மற்றும் E-Thaksalava கற்றல் முகாமைத்துவ தொகுதி என்பன இக்காலப்பகுதியில் கற்றலுக்கு பயன்படுத்த முடியும் . 
  • 10 ஆகஸ்ட் தவணை விடுமுறை தினங்கள் குறைக்கப்படலாம் . 
  • ஜூலை மாதத்தில் உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகள் தேசிய ரீதியில் நடைபெறும். 



Post a Comment

Previous Post Next Post