கடவுச்சீட்டு பெற செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்!


 ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


எனவே, www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நாள் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்பவர்கள் மாத்திரமே நிறுவனத்திற்கு வந்து சேவையை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post